அம்பாறை பகுதியில் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் தனது மணல் போக்குவரத்து தொழிலை எந்த பிரச்சனையும் இல்லாமல் தொடரவும், அந்த தொழிலுடன் சட்டப்பூர்வமாக செயல்படாமல் இருக்கவும் ரூ.25,000/=- (இருபத்தைந்தாயிரம் ரூபாய்) கோரிப்பெற்றுக் கொள்ளல் உதவி ஒத்தாசை புரிதல் ஆகிய குற்றச்சாட்டின் பேரில் அம்பாறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இரண்டு பொலீஸ் சார்ஜென்ட்கள் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குமுவின் விசாரணை அதிகாரிகளால் 21.06.2025 அன்று மதியம் 11.20 மணியளவில் அம்பாறை நகரத்தில் உள்ள கடிகார கோபுரத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டனர்.