பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் மேற்கொண்ட முறைப்பாட்டின் படி தெமட்டகொட, கொலன்னாவ சாலையில் இயங்கும் ஒரு நிறுவனத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான வருமான வரி அனுமதி அறிக்கையைப் பெற நடவடிக்கை எடுக்கும்போது, முறைப்பாட்டாளர், கடந்த வருடத்திற்கான ரூ.1.100,000/= (பதினொரு இலட்சம் ரூபாய்) வரி நிலுவைத் தொகையை செலுத்த வேண்டியுள்ளதாகத் தெரிவித்து, 2025ஆம் ஆண்டிற்கான வருமான வரி அனுமதி அறிக்கையை வழங்குவதற்கு ரூபா.100,000/= இலஞ்சமாக கோரியதுடன் அந்தத் தொகையை ரூபா.50,000/= (ஐம்பதாயிரம் ரூபாய்) ஆகக் குறைத்து குறைக்கப்பட்ட தொகையிலிருந்து ரூ.42>000.00 (நாற்பத்தி இரண்டாயிரம் ரூபாய்) 2025.07.03 அன்று இலஞ்சமாகக் கோரிப் பெறப்பட்டதுடன், மீதமுள்ள ரூபா.8000.00 (எட்டாயிரம் ரூபாயினை) ஜாவத்தையில் அமைந்துள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்கள நகரக் கிளையின் அலுவலகத்தில் வைத்து இலஞ்சமாகக் கோரிப் பெறப்பபட்ட சந்தர்ப்பத்தில் பிரதி ஆணையாளர் கே.சி.கே. குமார அவர்கள் 2025.07.07 அன்று பிற்பகல் 3.08 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின்; விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.








