ஒக்கம்பிட்டி பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் கைது

ஒக்கம்பிட்டி காமினிபுர பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் அளித்த முறைப்பாட்டின் படி ஒக்கம்பிட்டி பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர், ரூ. 40,000/- - இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட போது, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

ஒக்கம்பிட்டி பகுதியில் மணல் வியாபாரத்தை சீராக நடத்துவதற்கும், மணல் அகழ்வு இடத்திலிருந்து டிராக்டர் மூலம் மணல் சேகரிக்கும் இடத்திற்கு மணல் கொண்டு செல்வதற்கும் சட்டத்தினை நடைமுறைப்படுத்தாமல் இருக்க முறைப்பாட்டாளரிடம் மாதத்திற்கு ரூ.50,000/= வீதம் கோரியதுடன், மேலும் பல சந்தர்ப்பங்களில், அவர் ரூ.47000/= ரூபாவினை பெற்றுக் கொண்டதுடன், தொடர்ந்து மேற்கூறியவாறு உதவியாக செயற்படுவதற்கும், சந்தேக நபர் புதிதாகக் கட்டப்பட்ட வீட்டின் வேலைக்கு 03 கியூப் மணல் அல்லது அதன் பெறுமதியான ரூ.45000/= இனை இலஞ்சமாக கோரி அந்தத் தொகையை ரூபா.40000/= ஆகக் குறைத்து பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் மேற்படி சந்தேக நபர் 2025.07.2025 அன்று மாலை 5.07 மணியளவில் மாளிகாவில - மொனராகலை சாலையில் வீரகஸ் சந்திக்கு அருகில் வைத்து ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search