ஜா-எல பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து ஆடிஅம்பலம என்ற விவசாய சேவை மையத்தின் விவசாய அபிவிருதத்தி பிராந்திய அதிகாரி மற்றும் விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர் ஆகியோர் 15.08.2025 அன்று பிற்பகல் 2.00 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டர். முறைப்பாட்டாளருக்கு சொந்தமான 50 பேர்ச் வயல் நிலம், வயல் நிலம் அல்ல என்ற பரிந்துரையைப் பெறுவதற்கும், அந்தப் பரிந்துரை கிடைக்கும் வரை சம்பந்தப்பட்ட நிலம் வயல் நிலம் அல்ல என்பதை உறுதிப்படுத்தும் கடிதத்தை வழங்குவதற்கும் சந்தேக நபர்கள் 300000.00 இலஞ்சம் கேட்டு பெற்றுக்கொண்ட போது கைது செய்யப்பட்டனர்.








