கடுவெல கோரதொட்ட பிரதேசத்தில் வசிக்கும் வியாபாரியினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் முறைப்பாட்டாளரினால் கொண்டு வரப்பட்ட கொள்களனை விடுவிப்பதற்கு சுங்க அதிகாரிகளுக்கு ரூபா 500,000.00 இனை இலஞ்சமாக வழங்குவதற்கு முனைந்தமை, மேலும் ரூபா 329இ000ஃ- இனை இலஞ்சமாக கோரி அதில் 330,000.00 இலஞ்சமாக பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் இலங்கை சுங்கத்திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட தனியார் நிறுவனமொன்றின் வார்ஃப் எழுதுனர், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார். இந்த கைதானது 28.08.2025 அன்று இரவு 10:00 மணிக்கு ஒருகொடவத்தை கொள்கலன் முனையத்தில் மாலை சுமார் 5.30 மணியளவில் நடந்தது.
முன்னர் முறைப்பாட்டாளரிடமிருந்து ரூ. 1045,000/= இலஞ்சம் பெற்று, மேற்படி வார்ப் இலிகிதர் மற்றொரு கொள்கலனை விடுவிப்பதற்காக சுங்க அதிகாரிகளுக்கு வழங்கியதாக முறைப்பாட்டாளர் கூறியுள்ளார். மேலும், ஒருகொடவத்தை பயணிகள் பொருட்கள் முனையத்தில் உள்ள சுங்க அதிகாரிகள் அலுவலகத்தில் உள்ள உத்தியோக பூர்வ ஆவணங்கள் அடங்கிய அலுமாரியில் இருந்து ரூபா. 370,000/= தொகையையும் ஆணைக்குழு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.








