சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், அம்பாறை பிரிவில் உள்ள காரைதீவு பொலிஸ் நிலையத்தில், வழக்குப் பதிவு செய்யாமல் முறைப்பாடடாளரின் வருமானச் சான்றிதழை திருப்பித் தர ரூபா 10,000/= (பத்தாயிரம் ரூபாய்) இலஞ்சமாகக் கேட்டுப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் 2025.09.11 அன்று மாலை 6.10 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டார்








