இலஞ்சக் குற்றச்சாட்டில் ரூபா.10,000/= (பத்தாயிரம் ரூபாய்) இலஞ்சமாக கேட்டுப் பெற்றுக் கொண்ட் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் அலுவலக உதவியாளர்; ஒருவர் கைது செய்யப்பட்டார். இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், கொழும்பு 12 மாவட்ட நீதிமன்றத்தின் அலுவலக உதவியாளர் ஒருவர், 29.10.2025 அன்று காலை 10.26 மணியளவில் வாழைத்தோட்ட காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு கடையின் முன் ரூ.10,000/= (பத்தாயிரம் ரூபாய்) இலஞ்சமாக கேட்டுப் பெற்றுக் கொண்ட போது இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.








