வரையறுக்கப்பட்ட இலங்கை அரசாங்க வணிக (வேறு) கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹசைன் அஹமது பைலா 2015 ஆம் ஆண்டு எந்தவொரு தேவையுமின்றி, இலங்கை அரசு வணிக (வேறு) கூட்டுத்தாபனத்திற்கு பொருட்கள் மற்றும் சேவைகளை பெற்றுக் கொள்வதில் பின்பற்ற வேண்டிய பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையைப் பின்பற்றாமல், 50 கொக்குன் கிடங்குகளை (தற்காலிக கிடங்குகள்) கூட்டுத்தாபனத்திற்கு இறக்குமதி செய்தமையின் மூலம் அரசிற்கு ரூபா 99,679,799.70 நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 31.10.2025 அன்று காலை 8.30 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குவில் வைத்து கைது செய்யப்பட்டார்.








