பொத்துவில் பிரதேச நீர்ப்பாசன பொறியியல் அலுவலகத்தின் இயந்திர இயக்குனர் மற்றும் அக்கரைப்பற்று உதவி நீர்ப்பாசன பொறியியல் பிரிவு அலுவலகத்தின் பராமரிப்பு தொழிலாளி ஆகியோர் 17.10.2025 அன்று, கொச்சிகச்சேனை நெல் வயலுக்கு நீர் வழங்கும் கால்வாயை சுத்தம் செய்வதற்கு அக்கரைப்பற்று நீர்ப்பாசனத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட அகழ்வ இயந்திரத்திற்கு விவசாயிகள் சங்கம் வழங்கிய எரிபொருள் அளவு போதுமானதாக இல்லை என்றும், அதற்கு 51 லிட்டர் டீசல் செலவிடப்படும் என்றும் கூறி, ரூபா 13,200/= (பதின்மூன்றாயிரத்து இருநூறு ரூபாய்) இலஞ்சம் கேட்டு பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கொச்சிகச்சேனை நெல் வயல்களுக்குச் செல்லும் சாலையில் வைத்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் மேற்படி 17.10.2025 அன்று தினம் பிற்பகல் 3.40 மணியளவில் கைது செய்யப்பட்டனர்.








