24.11.2025 அன்று காலை 09.08 மணியளவில் இலஞ்சம் கேட்டுப் பெற்ற குற்றச்சாட்டில்; இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் நீதிமன்ற அழைப்பாணை நிறைவேற்று அலுவலர் கைது செய்யப்பட்டார். காலி மேலதிக நீதவான் நீதிமன்றத்தின் அழைப்பாணை நிறைவேற்று அலுவலராக செயல்பட்ட உடுகம நீதவான் நீதிமன்றத்தின் அழைப்பாணை நிறைவேற்று அலுவலராக காலி மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கின் தரப்பினருக்கு சட்டவிரோதமாக அழைப்பாணை ஒன்றைக் கொடுத்து, அழைப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ள விசாரணை திகதியை ஒத்திவைப்பதாக உறுதியளித்து குறித்த பெண்ணிடமிருந்து ரூபா 3500/= (மூவாயிரத்து ஐநூறு ரூபாய்) இலஞ்சம் கேட்டுப் பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டார்.








