நிலாவெளியைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டின் படி நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் சார்ஜன்ட் ஒருவர், முறைப்பாட்டாளரின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பான ஆவணங்களைத் தயாரிப்பதற்குத் தேவையான பொலிஸ் அறிக்கையைப் பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளுக்காக இலஞ்சமாக ரூபா 10,000/= (பத்தாயிரம் ரூபாய்) கோரிப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில், 16.12.2025 அன்று மாலை 4.56 மணியளவில் முறைப்பாட்டாளரின் வீட்டில் வைத்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.








