அத்தனகடவல பகுதியில் ஒருவர் அளித்த முறைப்பாட்டின்படி, முறைப்பாட்டாளர் 2025.12.09 அன்று தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அவரது மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டபோது, செல்லுபடியாகும் சாரதி அனுமதி பத்திரம் மற்றும் வருமான அனுமதி பத்திரம் இல்லாமல் இருந்ததால், சந்தேகத்திற்குரிய பொலீஸ் அதிகாரிகள் முறைப்பாட்டாளரின் மோட்டார் சைக்கிளின் காப்புறுதி சான்றிதழ் மற்றும் காலாவதியான வருமான அனுமதி பத்திரத்தை தங்கள் கட்டுக்காப்பில் வைத்துக் கொண்டு, குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூபா 5000.00 இனை இலஞ்சமாக கோரிய குற்றச்சாட்டில் தியபெதும பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவில் பணிபுரியும் ஒரு பொலீஸ் கான்ஸ்டபிள் மற்றும் ஒரு பொலிஸ் சார்ஜன்ட் ஆகியோர் தியபெதும வாராந்த சந்தைக்கு எதிரே உள்ள பிரதான சாலையில் வைத்து காலை 11.30 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.








