மருதமுனை பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் அளித்த முறைப்பாட்டின்படி, முறைப்பாட்டாளரின் மகளின் பிறப்பு அத்தாட்சிப் படிவத்தை பதிவு செய்ய சென்ற வேளை சந்தேக நபர் ரூபா 1000.00 இலஞ்சமாக அதில் ரூபா 500.00 அன்றைய தினத்தில் பெற்றுக் கொண்டு 2026.02.16 ஆம் திகதி பதிவு செய்யப்பட்ட பிறப்பு அத்தாட்சிப்படிவத்தை பெற்றுக் கொள்ள வருமாறும் அன்றைய தினம் எஞ்சிய தொகையான ரூபா 500.00 இனை எடுத்து வருமாறும் அறிவித்ததையடுத்து, ஆணைக்குழுவிற்கு அளித்த முறைப்பாட்டின் ட முறைப்பாட்டாளர் இன்றைய தினம் சந்தேக நபரை சந்தித்த சந்தர்ப்பத்தில் பிறப்பு அத்தாட்சிப்படிவத்தை வழங்கி ரூபா 500.00 இனை இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் அலுவலகத்தில் பதிற்கடமை புரியும் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் ஒருவர் 2026.02.16 அன்று மு.ப 11.45 மணியளவில் சந்தேக நபரின் வீட்டில் நடாத்தப்பட்டு வரும் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் காரியாலத்தில் வைத்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.








