வாழைச்சேனை கோரளைப்பற்று (மத்திய) பகுதி மற்றும் பொலன்னறுவை (பதில் கடமை) புரியும் காதி நீதிபதி ரூபா 5,000/= (ஐந்தாயிரம் ரூபாய்) இலஞ்சம் கோரிப் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்

ஓட்டமாவடியைச் சேர்ந்த முறைப்பாட்டாளரின் சட்டப்பூர்வ மனைவி, குழந்தைகளுக்கு பராமரிப்பு வழங்குமாறு கோரி நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த பாராமரிப்பு வழக்கில் ஆஜராகி பாராமரிப்புத் தொகையை செலுத்தத்தவறியமையினால் முறைப்பாட்டாளருக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்திலனால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. அந்த திறந்த பிடியாணை நகர்த்தல் பத்திரம் மூலம் நீக்கிக் கொள்ள காதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய பராமரிப்பு வழக்குகள் தொடர்பான விரிவான அறிக்கையின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதியை பெற்றுக் கொள்ள முனைந்த வேளை அதனை சமர்ப்பிக்க முறைப்பாட்டாளரிடம் ரூபா 5000.00 கோரிப்பெற்றுக் கொண்ட நிலையில் சந்தேக நபரான வாழைச்சேனை கோரளைப்பற்று (மத்திய) பகுதி மற்றும் பொலன்னறுவை (பதில் கடமை) புரியும் காதி நீpதிபதி 17.02.2026 அன்று, இலக்கம் 21, அக்பர் பள்ளிவாசல் வீதி, வாழைச்சேனை 05 இல் உள்ள காதி நீதிபதி அலுவலகத்தில வைத்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search