முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த ஒரு வியாபாரி ஒருவர் அளித்த முறைப்பாட்டின் படி> முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின்;; கணக்காளரான சண்முகராச பிரதீபன் மற்றும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தரான காசிப்பிள்ளை காந்தீபன் ஆகியோர்> முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின்;;; படுக்கை விரிப்புகளைத் துவைத்து சுத்தம் செய்வதற்காக முறைப்பாட்டாளர் பெற்ற ஒப்பந்தம் தொடர்பான மார்ச் மாதக் கட்டணத்திற்கான காசோலையை விடுவிப்பதற்காக> ரூபா 30,000/= (முப்பதாயிரம் ரூபாய்) இலஞ்சம் கோரிய மற்றும் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில்> 18.04.2026 அன்று காலை முறையே 11.10 மணி மற்றும் 11.05 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் கணக்குப் பிரிவில் வைத்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரிகளால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.








