நிதித்தூய்தாக்கல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில், முன்னாள் அமைச்சர் கெஹலிய பண்டார திஸாநாயக்க ரம்புக்வெல்லவின் இரண்டு மகள்கள், சமித்திரி ஜயனிகா ரம்புக்வெல்ல, அமலி நயனிகா ரம்புக்வெல்ல மற்றும் அமலி ரம்புக்வெல்லவின் கணவர் இசுரு புலஸ்தி பண்டார பொல்கஸ்தெனிய ஆகியோர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
மேற்கண்ட குற்றச்சாட்டுகளின் கீழ், ரூ.134,097,731.39 (13 கோடியே 40 இலட்சத்து 97 ஆயிரத்து 731 ரூபாய்) மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் ரூ 40,000,000/= (நாற்பது மில்லியன் ரூபாய்) மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ரூ.20,500,000/= (இருநூற்று ஐந்து இலட்சம் ரூபாய்) மதிப்புள்ள பென்ஸ் கார் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன> மேலும் இந்த விசாரணை தொடர்பாக கிட்டத்தட்ட 40 நிலையான வைப்பு கணக்குகள் மற்றும் ஆயுள் காப்புறுதி முதலீட்டுத் திட்டங்கள் ஏற்கனவே இடைநிறுத்தப்பட்டுள்ளன.