ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவமனையின் விஷேட நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் மகேஷி சூரசிங்க விஜேரத்ன, மருத்துவமனையின் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் கெகுலந்தல லியனகே இந்திகா, மற்றும் கடவத்தையைச் சேர்ந்த முத்துக்குடா ஆராச்சிகே நிமல் ரஞ்சித் முத்துக்குடா ஆகியோர் மேற்கூறிய மருத்துவரால் சட்டவிரோதமாக நடத்தப்படும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்களாவர். மேற்படி மூவரும் 17.06.2025 அன்று ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
நரம்பியல் சத்திர சிகிச்சை பணிகளுக்குத் தேவையான நுஏனு மற்றும் ஏP ளுர்ருNவு பொருட்களை வருடாந்த மதிப்பீட்டில் சேர்க்காமல், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவரின் கட்டுப்பாட்டில் உள்ள வெளி நிறுவனங்களுக்கு அந்தப் பொருட்களைப் பெற அறிவுறுத்தியதன் மூலம் ஊழல் குற்றத்தைச் செய்ததற்காக மேற்கூறிய விஷேட சத்திர சிகிச்சை நிபுணர்,; கைது செய்யப்பட்டார். இதன் மூலம் நோயாளிக்கு இழப்பு ஏற்பட்டு, தனக்கோ அல்லது வெளி தரப்பினருக்கோ தேவையற்ற இலாபத்தைப் பெற்றதோடு, மருத்துவமனையின் விநியோகத் துறையிடமிருந்து அந்தப் பொருட்களைக் கோராமல் மருத்துவமனைக்கு இழப்பு ஏற்படுத்தியதற்காகவும் மேற்கூறிய விஷேட சத்திர சிகிச்சை நிபுணர்,; கைது செய்யப்பட்டார்
இங்கு, 2022 ஆம் ஆண்டில் மருத்துவ விநியோகத் துறையில் நுஏனு என்ற பொருளின் விலை ரூ. 17500/= ஆக இருந்தது, அதே நேரத்தில் அதன் சராசரி தற்போதைய சந்தை விலை ரூ. 46500/= ஆகும். மருத்துவரின் பரிந்துரைகளின் பேரில் அவர் பரிந்துரைத்த வெளிப்புறக் கட்சிகள் மூலம் இந்தப் பொருளைப் பெறுவதற்கு நோயாளிகள் சுமார் ரூ. 120இ000ஃ- முதல் ரூ. 250,000/= வரை செலுத்த வேண்டியிருந்தது. இதுவரை, இதுபோன்ற சத்திர சிகிச்சைகளை மேற்கொண்ட சுமார் 300 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர், மேலும் அவர்களில் 77 பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேற்கண்ட குழுவிலிருந்து சத்திர சிகிச்சைகளை மேற்கொண்ட நோயாளிகளில் கணிசமான எண்ணிக்கையிலானவர்களும் இறந்துவிட்டதாக விசாரணைகள் தெரிவிக்கின்றன. வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட குழு (நோயாளிகள்) தொடர்பாக கிட்டத்தட்ட மூன்று கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.