இலங்கை காணி மீட்பு மற்றும்; அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் கீழ் செயல்படுத்தப்படும் வெரன்ஸ் கங்கை திட்டத்தின் முதல் கட்டத்தின் திறப்பு விழாவிற்காக கொள்முதல் நடைமுறைக்கு வெளியே ஒரு நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து, அந்த விழாவிற்காக திட்ட நிதியிலிருந்து ரூ. 27,600,000/= (ரூபாய் 276 லட்சம்) செலவழித்து அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தியதற்காக, காணி மீட்பு மற்றும்; அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதி பொது முகாமையாளராக செயற்பட்ட சுஜித் பிரயந்த முதுமால அவர்கள் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குமுவின் விசாரணை அதிகாரிகளால் 17.06.2025 அன்று மு.ப 11.45 மணியளவில் ஆணைக்குழுவில் வைத்து கைது செய்யப்பட்டார்.