முன்னாள் ஊடக மற்றும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட ஆறு குடும்ப உறுப்பினர்கள் மீது 26.06.2025 அன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பணத்துய்தாக்கலின் கீழ் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, பின்வரும் நபர்களுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழவினால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
- முன்னாள் வெகுஜன ஊடக மற்றும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல
- குசும் பிரியதர்ஷனி எபா வைஹேன
- சாமித்ரி ஜெயனிகா ரம்புக்வெல்ல
- சந்துல ரமாலி ரம்புக்வெல்ல
- அமலி நயனிகா ரம்புக்வெல்ல
- இசுரு புலஸ்தி பண்டார போல்கஸ்தெனிய
2023 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் பிரிவு 112 உடன் சேர்த்து 2011 ஆம் ஆண்டு 40 ஆம் இலக்க சட்டத்தால் திருத்தப்பட்ட 2006 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க நிதித்துய்தாக்கல் சட்டத்தின் பிரிவு 3 (1) (ஆ) மற்றும் பிரிவு 3 (2) இன் கீழ் ஆணைக்குழு 43 குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்துள்ளது (தனியார் வங்கியில் நிலையான வைப்புத்தொகை மற்றும் ஆயுள் காப்புறுதிக் கொள்கைகள் தொடர்பாக ரூபா 946 இலட்சம் மதிப்புள்ள தொகைக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.








