முன்னாள் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றிய கார்டி ஹேவகே டான் ஷான் யஹம்பத் குணரத்ன என்ற நபர், வெளிநாட்டு சேவை பணியகத்தின் அதிகாரிகளுக்கான வெளிவாரி பயிற்சி பட்டறைக்கான முன்மொழிவைச் சமர்ப்பித்த ஒரு நிறுவனத்திடமிருந்து பணம் கேட்டு கொள்முதல் செயல்பாட்டில் முறையற்ற முறையில் தலையிட்டு> தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து ரூ. 4.3 மில்லியன் ரூபாவினை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டுகளுடன் தொடர்பான விசாரணை தொடர்பில் 22.07.2025 அன்று காலை 10.00 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.








