இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் நடத்திய சுற்றிவளைப்பின் போது நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அலுவலகம் அருகே ரூ.10000.00 இலஞ்சம் பெற்றதற்காக இடைத்தரகர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மோட்டார் சைக்கிள் ஒன்றின் துணைப் பதிவுச் சான்றிதழை அசல் பதிவுச் சான்றிதழாக மாற்றுவதற்கு ரூ.30000/= இலஞ்சமாக கேட்டு அதில் ஆவணங்களை பெற்றுக் கொண்ட போது முற்பணமாக ரூபா 10000.00 இனை இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட போது காரியாலயத்தோடு இணைந்த கஜபா மாவத்தையில் அமைந்துள்ள கடை அறையினுள் வைத்து குறித்த இடைத்தரகர் 2025.07.28 அன்று காலை 11.10 மணியளவில் கைது செய்யப்பட்டார்.








