பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் மாகாண சபைகளின் ஒத்துழைப்புடன் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு புதிதாக நியமிக்கப்பட்ட 8,500க்கும் மேற்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை இலக்காகக் கொண்டு ஊழல் எதிர்ப்பு சட்டம் மற்றும் நேர்மைத்திறன் குறித்த அறிவை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத் தொடரை நடத்த திட்டமிட்டுள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழலற்ற உள்ளூராட்சி நிறுவனங்களின் கலாசாரத்தை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
அதன்படி, இந்தத் தொடர் நிகழ்ச்சித் திட்டத்தில் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையான காலப்பகுதியில் மாகாண மற்றும் மாவட்ட மட்டங்களில் சுமார் 40 நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் முதல் நிகழ்ச்சித் திட்டம் 2025 ஆகஸ்ட் 28 அன்று மேல் மாகாணத்தை மையமாகக் கொண்டு கௌரவ பிரதமரின் தலைமையில் நடைபெற உள்ளது.








