நகர அபிவிருத்தி அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் (தற்போது ஓய்வு பெற்றவர்) சம்பத் சுமேத பூஜித ரத்நாயக்க மற்றும் முன்னாள் பணிப்பாளர் (காணி) மற்றும் உள்ளக மதிப்பீட்டுக் குழுவின் தலைவர் (தற்போது ஓய்வு பெற்றவர்) கொஸ்வத்தே லியனகே வீரவன்ச பெரேரா ஆகியோர் கொழும்பு 05, மயூரா பிளேஸில் அமைந்துள்ள 55.5 பேர்ச்சர்ஸ் நிலத்தை தற்காலிகமாக குத்தகைக்கு எடுத்ததில் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ரூபா. 29,519,666.16 ஐ இழப்பீட்டை ஏற்படுத்தியதன் மூலம் ஊழல் புரிந்த குற்றச்சாட்டின் பேரில் 2025.09.11 அன்று காலை 9.30 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.








