இலங்கை ரயில்வே திணைக்களத்தின் முன்னாள் பொது முகாமையாளர் சுமதிபால மகாநாம அபேவிக்ரம மற்றும் இலங்கை பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் நிர்வாக பணிப்பாளரான சரத் சந்திர குணரத்ன ஜயதிலக ஆகியோர் முறையே 03.11.2025 அன்று காலை 9.15 மணிக்கும், காலை 10.15 மணிக்கும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். பின்வரும் குற்றச்சாட்டுகளின் பேரிலேயே கைதுகள் செய்யப்பட்டன.
தாபன விதிக்கோவையின் XLVIII அத்தியாயத்தின் முதல் அட்டவணையின் கீழ் இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ரயில் சாரதி ஐ.எல்.கே. திசாநாயக்கவிற்கு எதிராக வெளியிடப்பட்ட குற்றப்பத்திரிகையின்படி முறையான ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்ட பின்னர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, மேற்படி ரயில் ஓட்டுநர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரயில்வே பொது முகாமையாளர் பி.ஏ.பி. ஆரியரத்ன அவர்களினால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். மேற்படி பதவி நீக்க செயன்முறையை முற்றிலுமாக மாற்றியமைத்து மேற்கூறிய சுமதிபால மகாநாம அபேவிக்ரம, மற்றும் ரயில் சாரதியை பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்காமைக்காகவும், அவர்களுக்கு நன்மை செய்ததற்காகவும் கைது செய்யப்பட்டார்.
மேற்கூறிய சரத்சந்திர குணரத்ன ஜயதிலகா, இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களையும் சொத்துக்களையும் பயன்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான 'சிரிகொத்தா' கட்டிடத்தை பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையைப் பின்பற்றாமல் புதுப்பித்ததன் மூலம், அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு ரூபா. 1,667,294.87 இழப்பையும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு முறையற்ற இலாபத்தையும் ஏற்படுத்தியமைக்காக கைது செய்யப்பட்டார்.








