இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்குக் கிடைத்த இரகசியத் தகவலின்படி, 22.10.2025 அன்று மாலை 7.21 மணியளவில், பொலன்னறுவையில் உள்ள அரலிய அரிசி ஆலை தனியார் நிறுவனத்தின் முன் உள்ள பிரதான நெடுஞ்சாலையில், ஒரு தனியார் நிறுவனத்தின் புPளு தொழில்நுட்ப குழு மேற்பார்வை முகாமையாளர் (GROUP GPS MONITORING MANAGER) இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ அடையாள அட்டையைப் போன்ற போலி அடையாள அட்டையைத் தயாரித்து, அந்த அடையாள அட்டையை காட்டி அரச அதிகாரிகளில் ஆதிக்கம் செலுத்த முற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.
மேற்படி நபர்கள் அல்லது வேறு யாராவது ஒருவர் இவ்வாறு ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ அடையாள அட்டையை தவறாக பயன்படுத்துவது அல்லது இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்ய போலி ஆவணங்களைப் பயன்படுத்துவது உறுதிசெய்யப்பட்டால், ஆணைக்குழுவின் புலனாய்வுப் பிரிவு பொதுமக்களை இந்த விஷயம் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் ஆணைக்குழுவிற்கு உடன் 1954 என்ற துரித தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் கேட்டுக்கொள்கிறது.








