துறைமுக அதிகாரசபையில் அரச தொழில் ஒன்றினை வழஙக் ரூபா 500,000 இலஞ்சம் அவசியம் என்றும், முதலில் ரூபா 250,000.00 இனை வழங்க வேண்டும் என்றும், மீதமுள்ள தொகையை வேலை கிடைத்த பிறகு வழங்க வேண்டும் என்றும் கூறி ரூபா 245,000.00 (இரண்டு இலட்சத்து நாற்பத்தைந்தாயிரம்) இனை இலஞ்சமாக கோரி பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் கடற்றொழில் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரி ரூப்பே கெதர மதுஷா திலீப ன ஜயசூரிய மற்றும் முன்னாள் வீட்டுவசதி மற்றும் கட்டுமானத் துறை பிரதி அமைச்சர் இந்திக பண்டார விஜேசுந்தரவின் பணியாளர்களில் ஒருவரும் 23.10.2025 அன்று பிற்பகல் 2.00 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் வைத்து கைது விசாரணை அதிகாரிகளால் செய்யப்பட்டனர்.








