இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலைவர் ஊழுPயு மற்றும் ஊழுPநு அங்கத்தவர்களை ஈர்க்கும் வகையிலான முன்வைப்பினை மேற்கொண்டார்

2025 நவம்பர் 21 அன்று COPA மற்றும் COPE உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் போது, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) தலைவர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நீல் இத்தவெல, CIABOC இன் செயல்பாடுகள் மற்றும் பணிகள் குறித்து சுருக்கமான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான சொற்பொழிவை நிகழ்த்தினார். 

பங்கேற்பாளர்களால் விரிவான, தெளிவான மற்றும் மிகவும் தகவல் உள்ளீர்க்கப்பட்ட முன்வைப்பாக அமையப் பெற்றது. புதிய ஊழல் எதிர்ப்பு கட்டமைப்பின் கீழ் ஆணைக்குழுவின் பணி, ஒருங்கிணைந்த மேற்பார்வையின் முக்கியத்துவம் மற்றும் நிறுவன நேர்மைத்திறனை வலுப்படுத்துவதற்கான வழிகள் ஆகியவற்றை விவரிப்பதாய் அமையப் பெற்றது.

பங்குபற்றுனர்கள் அமர்வில் தீவிரமாக ஈடுபட்டதுடன், புலனாய்வு நடைமுறைகள், மேற்பார்வைக் குழுக்களுடனான ஒத்துழைப்பு மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதில் உள்ள சவால்கள் குறித்து ஏராளமான கேள்விகளை எழுப்பினர். தலைவர் துல்லியமான மற்றும் முழுமையான பதில்களை வழங்கினார், அவரது தெளிவு மற்றும் அறிவின் ஆழத்திற்கு வலுவான பாராட்டுகளைப் பெற்றார்.

இந்த அமர்வு உறுப்பினர்களின் நெறிமுறை மேற்பார்வை பற்றிய புரிதலை கணிசமாக மேம்படுத்தியதுடன் பாராளுமன்றத்தின் நிதி ஆய்வு மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கான நிகழ்ச்சித்திட்டத்தின் ஒட்டுமொத்த நோக்கத்தை தெளிவுபடுத்துவதாக அமையப்பெற்றது.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search