இலஞ்ச சட்டத்தின் பிரிவு 23 (அ) (1) இன் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் விளையாட்டு, தனியார் போக்குவரத்து மற்றும் கால்நடை வளங்கள் தொடர்பான அமைச்சுக்களில் அமைச்சராகப் பணியாற்றிய ரத்நாயக்க முதியன்செலாகே சந்திரசிறி பண்டார ரத்நாயக்க, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் 2025.12.02 அன்று பிற்பகல் 1.40 மணியளவில் கைது செய்யப்பட்டார்.








