கடந்த 09.05.2022 அன்று நடைபெற்ற பொதுமக்கள் போராட்டத்தின் போது இலங்கை மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்ட கட்டிடம் உள்ளிட்ட சொத்துக்கள் சேதமடைந்த பின்னர், முன்னாள் மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சருமான சஷிந்திர குமார ராஜபக்ஷவின் ஊழியரான மனோஜ் ஹேமலால் ஏகநாயக்க என்பவரின் பெயரில் உரிமம் தயாரிக்க, அவருக்குக் கீழ் பணியாற்றிய வளவ பிரிவின் வதிவிட முகாமையாளர் உட்பட இலங்கை மகாவலி அதிகாரசபையின் அதிகாரிகளை அவர் தூண்டி, மேற்கூறிய இழப்பீட்டைப் பெற மேற்கூறிய சஷிந்திர குமார ராஜபக்ஸவிற்கு உதவி ஒத்தாசை புரிந்தார். இதன் மூலம் 1992 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க பொதுச் சொத்துச் சட்டத்தின் பிரிவு 5 (1) மற்றும் 2023 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் பிரிவு பிரிவு 133 மற்றும் 135 உடன் சேர்த்து வாசிக்கக் கூடிய பிரிவு 111 கீழ் குற்றத்தின் பேரில் இலங்கை மகாவலி அதிகாரசபையின் அப்போதைய பணிப்பாளர் நாயகம் கீர்த்தி பண்டார கொட்டகம, 09.12.2025 அன்று மாலை 4.30 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.








