Continental Insurance Lanka Limited தனியார் காப்புறுதி நிறுவனத்தின் பிரதித் தலைவர் கணேராச்சிகே தேசங்கர் சமிந்த டி சில்வா, அரசாங்க பகுப்பாய்வாளர் அலுவலகத்தில் பணிபுரிந்த டி.எச்.எல்.டபிள்யூ. ஜயமான்னே (2025 டிசம்பர் 5 அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவர்) என்ற நபரிடமிருந்து சட்டவிரோதமாக அறிக்கைகளைப் பெற ரூ. 6,415,050.00 (அறுபத்து நான்கு இலட்சத்து பதினைந்தாயிரத்து ஐம்பது ரூபாய்) இலஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டின் பேரில், டிசம்பர் 9, 2025 அன்று பிற்பகல் 3.55 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதன் மூலம் மேற்கூறிய நிறுவனத்திற்கு சட்டவிரோத இலாபம் ஈட்டித் தந்ததோடு, மேற்கூறிய டி.எச்.எல்.டபிள்யூ. ஜயமான்னே செய்த ஊழலுக்கு உதவிய குற்றச்சாட்டின் அடிப்பமையிலுமே கைது செய்யப்பட்டு பிரதம நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.








