லங்கா சதொசாவின் முன்னாள் முன்னாள் சிரேஸ்ட முகாமையாளர் (விநியோகம்) தோமகமுவா முடியன்சேலாகே ஆரியவன்ஸ, ரணசிங்க சிறினிமல் பெர்னாண்டோ மற்றும் வியாபாரி சின்னையா கமலா குமார் ஆகியோர் 29.01.2026 அன்று, அமைச்சரவையின் தீர்மானத்திற்கும் லங்கா சதொசவின் தற்போதைய விதிகளுக்கும் மாறாக, ஒரு தனியார் வியாபாரிக்கு நன்மையை வழங்கும் நோக்கத்துடன், ஒரு கிலோவிற்கு ரூபா 135/= என்ற விலையில் 54860 கிலோகிராம் பூண்டை ஒரு தனியார் தரப்பினருக்கு விற்றதற்காக ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டனர். இதன் விளைவாக லங்கா சதொசவிற்கு ரூபா
17,006,600/= இழப்பு ஏற்பட்டது. இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் காலை 9.15, காலை 9.17 மற்றும் காலை 11.20 மணியளவில் கைது செய்யப்பட்டனர்.








