கப்பேல மொஹொட்டாலகே நிஹால் சிசிர குமார என்ற வியாபாரி 28.01.2026 அன்று அதிகாலை 3.35 மணியளவில் பணத்தூய்தாக்கலுக்கு உதவி ஒத்தாசை புரிந்த குற்றச்சாட்டில் 2006 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க பணத்துய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட 2011 ஆம் ஆண்டு 40 ஆம் இலக்க பணத்தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 3 (1) (டி) இன் கீழ் பணத்தூய்தாக்கலுக்கு துணைபோனதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் பெறப்பட்ட ரூபா 748,000,000/= அளவுக்கு பணத்தை தூய்தாக்கல் செய்ததில், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தனக்குச்
சேர வேண்டியிராத ரூபா. 30,000,000/= தொகையை தெரிந்தே தனது வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இலஞ்சம் மற்றும்
ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








