2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டம் ஒரு மையப்படுத்தப்பட்ட இலத்திரனியல அமைப்பை நிறுவி, சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளின் வெளிப்படுத்தல் களைப் பெற்று சரிபார்க்கும் பொறுப்பை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் ஒப்படைத்தது.
அதன்படி, மார்ச் 31, 2026 முதல் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை வெளிப்படுத்த மையப்படுத்தப்பட்ட இலத்திரனியல் அமைப்பில் அணுகும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கும், அதன் பிறகு அச்சிடப்பட்ட படிவத்தைப் பயன்படுத்தி சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை.
இது சம்பந்தமாக, சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை நிகழ்நிலையில் (online) வெளிப்படுத்த, தொடர்புடைய மையப்படுத்தப்பட்ட இலத்திரனியல் அமைப்பை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ இனையத்தளம் (ciaboc.gov.lk) மூலம் மட்டுமே அணுகுதல் வேண்டும். வேறு எந்த முறையை அல்லது இணைப்பை பயன்படுத்தி தொடர்புடைய வெளிப்படுத்தல்களைச் செய்ய வேண்டிய நபர்கள் தங்கள் விவரங்களை உள்ள்Pர்க்கக் கூடாது.
2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் பிரிவு 80 (1) இன் கீழ் வெளிப்படுத்தல்களைச் செய்ய வேண்டிய அனைத்து நபர்களும் தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த வெளிப்படுத்தல்களைச் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், சட்டத்தின் பிரிவு 82 (1) இன் படி, முதல் நியமன வெளிப்படுத்தல், வருடாந்திர வெளிப்படுத்தல், பதவிக் காலம் அல்லது ஓய்வு பெறும்போது செய்யப்படும் வெளிப்படுத்தல், ஓய்வுக்குப் பிந்தைய வெளிப்படுத்தல், நிமித்த வெளிப்படுத்தல் மற்றும் தேர்தல் வெளிப்படுத்தல் ஆகியவை இந்த நிகழ்நிலை (online) அமைப்பின் மூலம் செய்யப்படும்.








