மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகத்தால் ஒரு பிள்ளைக்கு ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் கல்வி உதவித் தொகையான ரூபா 10,000/=ஐ இரண்டு பிள்ளைகளின் பெயரில் பெற்று, அந்தப் பணத்தை சம்பந்தப்பட்ட பிள்ளைகளுக்கு வழங்காமல் தனது தனிப்பட்ட பயன்பாட்டிற்குப் பயன்படுத்திய கட்டான பிரதேச செயலகத்தின் முன்னாள் சமூக சேவை அதிகாரியான குடா பேதுரு ஆராச்சிலாகே சமன் ஸ்ரீயாரத்ன, 24.02.2026 அன்று பி.ப 12.45 மணியளவில், ஊழல் குற்றச்சாட்டின் பேரில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.








