ஊழல் குற்றச்சாட்டின் பேரில் வர்த்தக அமைச்சின் முன்னாள் செயலாளர், முன்னாள் மேலதிக செயலாளர் மற்றும் பிரதம நிதி அதிகாரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்

லலித் அதுலத் முதலி மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நிதியத்திற்கு நிதி திரட்டுவதற்காக ஆன்லைன் அதிஷ்ட லாபசீட்டை (லொத்தர்) ஆரம்பிக்க நடாத்தப்பட்ட கொள்முதல் தொடர்பாக, வெற்றிகரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதலீட்டாளருக்கு விலைமனுவை வழங்காமல் அரசாங்கத்திற்கும் நிறுவனத்திற்கும் இழப்பை ஏற்படுத்தியது மற்றும் மீண்டும் விலை மனுக்களை கோருவதன் மூலம் ஊழல் புரிந்தமை தொடர்பாக, வர்த்தக அமைச்சின் முன்னாள் செயலாளர் ஏ.எம். பிரியங்கா மத்தும பண்டார அத்தப்பத்து, முன்னாள் மேலதிக செயலாளர் (நிர்வாகம்) துரைசாமி ஜீவானந்தம் மற்றும் பிரதம நிதி அதிகாரி கலுதேவ அரவிந்த பிரியதர்ஷனி டி சில்வா ஆகிய மூவரும், மேலும் விலைமனுக்களை மீண்டும் கோரும் போது முதல் ஏலத்தில் தெரிவாகாமல் நிராகரிக்கப்பட்ட ஒரு நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து ரூபா 1,000,000/= இனை இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் மேலே குறிப்பிட்ட முதலிரு குற்றவாளிகளுடன் மூன்றாவது குற்றவாளியும் அடங்கலாக மூன்று குற்றவாளிகளும் 24.02.2026 அன்றைய தினம் முறையே மு.ப 10.05, மு.ப. 10.20 மற்றும் மு.ப 10.30 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search