குண்டசாலையில் உள்ள உடமலுவ தொல்பொருள் தளத்தில் அமைந்துள்ள கண்டி இராச்சியத்தின் சிங்கள வம்சத்தின் கடைசி மன்னரான ஸ்ரீ வீர பராக்கிரம நரேந்திரசிங்கவின் அரண்மனையின் நுழைவாயிலுக்கு அருகில் அமைந்துள்ள வரலாற்று தொல்பொருள் கலைப்பொருளான 'சந்தகல' திருட்டு தொடர்பான விசாரணையில் செல்வாக்கு செலுத்தியதாகவும், குற்றத்தில் ஈடுபட்ட சில சந்தேக நபர்கள் தப்பிக்கத் தூண்டியதன் மூலம் ஊழல் குற்றத்தைச் செய்ததாகவும் குற்றச்சாட்டின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபரான பிரசாத் ரணசிங்க, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால்; 10.03.2026 அன்று காலை 11.45 மணியளவில் கைது செய்யப்பட்டார்.








