சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் முன்னாள் பிரதம கணக்காளரான உடுகம ஆராச்சிலாகே மங்களசிறி குமாரரத்ன சுமனசேகர, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் 11.03.2026 அன்று காலை 09.40 மணியளவில், இலஞ்சச் சட்டத்தின் பிரிவு 23(அ) (1) இன் கீழ், தனது சட்டப்பூர்வ வருமானத்திற்கு அதிகமாக ரூ. 4,428,305.70 மதிப்புள்ள சொத்துக்களைச் சேர்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.








