இலஞ்சம் பெற்று தொழிலாளர் அலுவலக கள அதிகாரிக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு

வெல்லவாய, வீரசேகரகமவில் கோழிப்பண்ணை நடத்தி வரும் ஒரு வியாபரியிடமிருந்து ரூபா 15,000/=  இலஞ்சமாகக் கேட்டுப் பெற்றது தொடர்பாக, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவிற்கு 2009 செப்டம்பர் 02 அன்று கிடைக்கப்பெற்ற எழுத்து மூல  முறைப்பாட்டின் அடிப்படையிலான விசாரணைகளின் அடிப்படையில்  குறித்த  குற்றச்சாட்டுகள் மீது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைகளின் நிறைவில்  ஹப்புத்தலே மாவட்ட தொழிலாளர் அலுவலகத்தில் தொழிலாளர் அதிகாரியாகப் பணியாற்றி வந்த அமுதமன ஆரச்சிகே நிமல் ரோஹன சோமவர்தன என்ற குற்றவாளிக்கு 2026.04.23 அன்று 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து  தீர்ப்பளிக்கப்பட்டது.

சமர்ப்பிக்கப்பட்ட அனைத்துச் சான்றுகளையும் பரிசீலித்த பின்னர், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுவிட்டன என்று கௌரவ நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. மேலும், கொழும்பு மேல் நீதிமன்றம், நீதிமன்ற இல 06 இல், HCB 2116/2015 என்ற வழக்கு இலக்கத்தின் கீழ் 23.04.2026 அன்று அமுதமன ஆரச்சிகே நிமல் ரோஹன சோமவர்தன மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என்று கௌரவ மேல் நீதிமன்ற நீதிபதி முகமது மிஹால் தீர்ப்பளித்துள்ளார். அதன்படி, ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 06 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் (அத்தகைய தண்டனைகள் ஒரே நேரத்தில் அனுபவிக்கப்படல் வேண்டும்), ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் ரூபா 5,000/= அபராதமும், இலஞ்சமாகப் பெற்ற ரூபா 15,000/= தொகைக்குச் சமமான மேலதிக தண்டப்பணமும் விதித்து தீர்ப்பனிக்கப்பட்டது. 

இவ்வழக்கினை ஆணைக்குழுவின்  சார்பில் உதவிப் பணிப்பாளர் நாயகம் செல்வி தனுஜா பண்டாரா அவர்கள் நெறிப்படுத்தினார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search