விமான நிலையங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவன அதிகாரிகளுக்கான இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சித் தொடரில் மற்றொரு நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றது

விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) லிமிடெட் அதிகாரிகளுக்கான இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சித் தொடரில் மற்றொரு நிகழ்ச்சி மே 29 ஆம் திகதி வெற்றிகரமாக நடைபெற்றது. மேற்படி நிறுவனத்தின் சுமார் 40 அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டம், இலஞ்சம், ஊழல், சட்டவிரோத சொத்துக் குவிப்பு மற்றும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை வெளிப்படுத்தல் தொடர்பிலும்; இலஞ்சம் மற்றும் ஊழலின் விளைவுகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டதுடன் விழிப்புணர்வும் அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழவின் சார்பில் ஊழல் தடுப்பு நிவாரண அதிகாரி நிபுனி தென்னகோன் மற்றும் ஊழல் தடுப்பு நிவாரண அதிகாரி தி திரு. ஷம்மி ஸ்ரீ லால் ஆகியோர் விரிவுரைகளை முன்னெடுத்தனர்.

58 1

58 1

58 1

58 1

58 1

58 1

58 1

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search