உள்ளக அலுவல்கள் பிரிவுகளின் பொறுப்புக்கள் மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பது குறித்து பிரதமர் அலுவலக அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் ஜூன் 05, 2025 அன்று அலரி மாளிகை கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் சுமார் 150 அதிகாரிகள் பங்கு பற்றி பயனடைந்தனர்.
இலஞ்சம் அல்லது ஊழல பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் திரு. ஆர்.எஸ்.சி. திசாநாயக்க, உதவி பணிப்பாளர் நாயகம் தனுஜா பண்டார, களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. தரிந்து தனஞ்சய வீரசிங்க, ஊழல் தடுப்பு நிவாரண உத்தியோகத்தர் திருமதி விமுக்தி ஜெயசூரிய மற்றும் ஊழல் தடுப்பு நிவாரண உத்தியோகத்தர் திருமதி உதேஷிகா ஜெயசேகர ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் வளவாளர்களாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி, இலஞ்சம், ஊழல், சட்டவிரோத சொத்து குவிப்பு மற்றும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை வெளிப்படுத்தல் 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டம், இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பது, ஊழல் மதிப்பீட்டுச் சுட்டி, நேர்மைத்திறன் மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழலின் விளைவுகள் முதலானவற்றுடன் உள்ளக அலுவல்கள் பிரிவுகளின் நோக்கம், பொறுப்புக்கள் மற்றும் பணிகள் குறித்த விழிப்புணர்வை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.





























