'நேர்மையான தேசத்தை நோக்கி' என்ற தொனிப்பொருளின் கீழ் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு மற்றும் அதன் பணியாளர் சேவை அலுவலர்களுக்கான தடுப்பு நிவாரண நிகழ்ச்சித்திட்டம் 2025.06.06 அன்று 'மக நெகும மக மெதுரா' வளாகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில்,2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டம் மற்றும் அதன் புதிய போக்குகள், இலஞ்சம் மற்றும் ஊழல், சமூகத்தில் அதன் பாதகமான விளைவுகள், ஊழல் மதிப்பீட்டு குறிக்காட்டி, சொத்துகக்ள் மற்றும் பொறுப்புக்கள் வெளிப்படுத்தல் மற்றும் தடுப்பு நிவாரணம் மூலம் நாட்டிலிருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதன் மூலம் ஒரு நேர்மையான இலங்கையை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குராற்பன விழாவைக் குறிக்கும் வகையில், அமைச்சின் செயலாளர் சிரேஸ்ட பேராசிரியர் கபில சி.கே. பெரேரா, நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கத்தை விளக்கினார். அமைச்சின் பணியாளர் சேவை அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சிக்கு, இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவின் சார்பாக திருமதி நிபுனி கோசிலா தென்னகோன் மற்றும் திரு. ஷிலமேகா வெலித்தொட்டகே ஆகியோர் வளவாளர்களாக கலந்து சிறப்பித்தனர்.




















