இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (ஊஐயுடீழுஊ) ஜூன் 9, 2025 அன்று கட்டுநாயக்கவில் உள்ள சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பிரதான கேட்போர் கூடத்தில், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் சிறப்பு செயல்பாட்டுப் பகுதிகளில் இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பதில் கவனம் செலுத்தும் ஒரு விழிப்புணர்வு அமர்வை நடத்தியது.
சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் சிரேஸ்ட அதிகாரிகள் இந்த அமர்வில் பங்கேற்று, பரிந்துரைகளைக் கண்டறிந்து, தற்போதுள்ள அமைப்பில் உள்ள குறைபாடுகளை எடுத்துக்காட்டுவதன் மூலம் ஆர்வத்துடன் பங்களித்தனர். கலந்துரையாடல் அமர்வில் காலங்கடந்த விதிமுறைகள் மற்றும் பரிசோதனை மற்றும் ஆராய்ச்சி அடிப்படையிலான பரிந்துரைகள் தேவைப்படும் பாரம்பரிய நடைமுறைகளிலிருந்து உருவாகும் முறையான பாதிப்புகளை பங்குபற்றுனர்கள் ஏற்று அங்கீகரித்தனர்.
புதிய சொத்துக்கள் பொறுப்புக்கள் வெளிப்படுத்தல் வரைவு படிவங்கள் மற்றும் அவற்றின் நிறைவு நடைமுறைகள் குறித்த விரிவான கலந்துரையாடல்களும் அமர்வில் இடம்பெற்றன.
விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கான வளவாளர்களாக CIABOC ஊழல் தடுப்பு அதிகாரிகளான சாமோதி ஜயசிங்க மற்றும் ஷிலமேகா வெலித்தொட்டகே ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.




















