இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஜூன் 26, 2025 அன்று ஊழலிற்கு எதிரான தேசிய செயற்பாட்டுத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான சிறப்பு கலந்துரையாடலை நடத்தியது. இலஞ்சம் மற்றும் ஊழல் எதிர்த்துப் போராடுதல், நேர்மைத்திறனை நிலைநாட்டுதல் குறித்து பல்கலைக்கழக சமூகத்திற்கு கல்வியூட்டல் மற்றும் அதிகாரமளித்தல் தொடர்பான விஷயங்களைப் பற்றி இந்த பயனுள்ள கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது. இது ஆணைக்குழவின் சிறிய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இலங்கையை இலஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத நாடாக மாற்றுவதற்கு பல்வேறு தடுப்பு நுட்பங்கள் தேவைப்படுவதால், பல்கலைக்கழக சமூகம் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு அதை கடத்துவதற்கான பல்வேறு உத்திகள் விரிவாக கலந்துரையாடப்பட்டன. இலஞ்சம் அல்லது ஊழல பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழம் இணைந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
UGC சார்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன, செயலாளர், துணைச் செயலாளர் மற்றும் UGC இன் பல அதிகாரிகள் கலந்துரையாடலில் பங்குபற்றினர். CIABOC ஆணையாளர் திரு. கே. பெர்னார்ட் ராஜபக்ஷ, CIABOC பணிப்பாளர் நாயகம் திரு. ஆர்.எஸ்.ஏ. திசாநாயக்க, பிரதி பணிப்பாளர் நாயகம் திருமதி. சுபாஷினி சிறிவர்தன, மற்றும் ஊழல் தடுப்பு நிவாரண அதிகாரிகள் திரு. சம்பத் ஆராச்சிகே, திருமதி. நிபுனி தென்னகோன் மற்றும் திரு. ஷிலமேகா வெலிதொட்டகே ஆகியோர் ஆணைக்குழுவின் சார்பாக கலந்து கொண்டனர்.


















