தொழிலாளர் திணைக்களத்திற்கு புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 150 முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான (தரம் ஐஐஐ) அறிமுகப் பயிற்சித் திட்டங்கள் நாரஹேன்பிட்டியில் உள்ள தொழிலாளர் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் 2025 அக்டோபர் 14 ஆம் தேதி நடைபெற்றது.
இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின், ஊழல் தடுப்பு அதிகாரி திருமதி உதேஷிகா ஜயசேகர மற்றும் ஊழல் தடுப்பு அதிகாரி திரு. சம்பத் ஆராச்சிகே ஆகியோர் இந்த திட்டத்தின் வளவாளர்களாக கலந்து சிங்கள மொழியமில் விரிவுரைகளை முன்னெடுத்ததுடன், இதே தினத்தில் தமிழ் மொழி மூல உத்தியோகத்தர்களுக்கு பிரத்தியேகமாக நடைபெற்ற விரிவுரையில் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சட்டப்பிரிவின் உதவிப்பணிப்பாளர் சட்டத்தரணி சால்தீன் எம். சப்ரி அவர்கள் விரிவுரைகளை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம், இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பது மற்றும் அதன் விளைவுகள், இது தொடர்பாக அவர்களுக்கு உள்ள சந்தேகங்கள் மற்றும் நேர்மைத்திறன் மற்றும் புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டம் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








