2025 நவம்பர் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தென் மாகாண அதிகாரிகளான தலா 150 பேர் கொண்ட சுமார் 300 அதிகாரிகளை உள்ளடக்கிய இரு குழுவிற்கு இலஞ்சம் மற்றும் ஊழல் குறித்த ஊழல் தடுப்பு நிவாரண நிகழ்ச்சிகள் மாத்தறை தபால் அலுவலக பிரதான கேட்போர் கூடத்தில் நடத்தப்பட்டது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தின் ஊழல் தடுப்பு அதிகாரி திருமதி ஜே.எல்.ஏ. உதேஷிகா மதுபாசானி மற்றும் ஊழல் தடுப்பு அதிகாரி திரு. சம்பத் ஆராச்சிகே ஆகியோரால் இந்த நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிகள் மூலம், இலஞ்சம் மற்றும் ஊழல் என்றால் என்ன, அதைத் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம், அதன் விளைவுகள், இது தொடர்பாக அவர்களுக்கு உள்ள சந்தேகங்கள் நேர்மைத்திறன் மற்றும் 2023 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.











