இலங்கை தேயிலைசபையின் அதிகாரிகளுக்கான இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு நிவாரண நிகழ்ச்சித் திட்டம் 2025 நவம்பர் 24 ஆம் திகதி நிறுவனத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது, இதில் இலங்கை தேயிலை சபையின் சுமார் 38 அலுவலர்கள் பங்கேற்றனர்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தின் ஊழல் தடுப்பு அதிகாரி திருமதி திருமதி என். விமுக்தி ஜயசூரிய தலைமைதாங்கி நிகழ்ச்சிகளை முன்னெடுத்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம், புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டம், இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பது மற்றும் அதன் விளைவுகள், இது தொடர்பாக அவர்களுக்கு உள்ள சந்தேகங்கள் நேர்மைத்திறன் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.








