மேற்படி நிகழ்ச்சித்திட்டம் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு. அருண பண்டார அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது, இதில் அமைச்சின் மேலதிக செயலாளர்கள், அனைத்து நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஏனைய அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி 2025 நவம்பர் 4 மற்றும் 21 ஆகிய திகதிகளில் அமைச்சின் டங்கன் வைட் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் ஊழல் தடுப்பு அதிகாரி திரு. சம்பத் ஆராச்சிகே இந்த நிகழ்ச்சிக்கான இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கான விரிவுரையினை முன்னெடுத்தார். இந்த நிகழ்ச்சி 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டம், சட்டவிரோத சொத்துக்களைக் குவித்தல் தொடர்பான புதிய சட்ட விதிகள், நேர்மைத்திறன், அரச அதிகாரிகளின் செயல்திறன்; மற்றும் பொறுப்புடைமை முதலானவை தொடர்பாக அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் ஊழல் தடுப்பில் உள் விவகார அலகுகளின் பங்கு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.








