புதிதாக தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான 'ஊழல் எதிர்ப்பு சட்டம் மற்றும் நேர்மைத்திறன் குறித்த அறிவை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித் தொடரில் வட மாகாண நிகழ்ச்சிகள் சிறப்பாக நிறைவு

பொது நிர்வாகம், மாகாண சபைகள் உள்நாட்டலுவல்கள், அமைச்சு மற்றும் மாகாண சபைகளின் ஆதரவுடன்இ இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு 8,500 க்கும் மேற்பட்ட புதிதாக நியமிக்கப்பட்ட உள்ளூராட்சி உறுப்பினர்களை இலக்காகக் கொண்டு ஊழல் எதிர்ப்பு சட்டம் மற்றும் நேர்மைத்திறன் குறித்த அறிவை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித் தொடரின் 8 வது மாகாண மட்ட நிகழ்ச்சித்தொடர் கடந்த ஜனவரி 26, 27, 28 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம், சாவகச்சேரி மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் சிறப்பாக நடைபெற்றது.

இலஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத உள்ளூராட்சி மன்றங்களினை உருவாக்கும் நோக்குடன் இடம் பெற்றுவரும் இந்த நிகழ்சித் தொடரில் யாழ்ப்பாண பிரதம் செயலாளர் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் ஆணையாளர் கௌரவ சேத்திய குணசேகர அவர்கள் தலைமை தாங்கியதுடன் வட மாகாண ஆளுநர் கௌரவ வேதநாயகம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் உள்நாட்டலுவல்கள், அமைச்சு மற்றும் மாகாண சபைகளின் ஆதரவுடன், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் (UNDP) நிதி உதவியுடன் நடாத்தும் இந்த வட மாகாண நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதில் வட மாகாண உளளூராட்சி மன்ற ஆணையாளர் எஸ். சுதர்ஸன் அவர்கள் செயலாற்றியமை குறிப்பிடத்தக்கது.

வட மாகாணத்தின் புதிதாக தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் கௌரவ மேயர்கள், தவிசாளர்கள் மற்றும் கௌரவ உறுப்பினர்கள் யாழ்ப்பாணம், சாவகச்சேரி மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து சிறப்பித்தனர். மேற்படி நிகழ்ச்சித் தொடரில் குறித்த நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் சட்டப்பிரிவின் உதவிப்பணிப்பாளர் சட்டத்தரணி சால்தீன் எம். சப்ரி தெளிவுபடுத்தல்களை மேற்கொண்டதுடன், ஊழலற்ற உள்ளுராட்சி மன்றங்களை கட்டியெழுப்புவதில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பங்கு தொடர்பிலான நிகழ்நிலை மூலமான விரிவுரியினை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ ரங்க திசாநாயக்க அவர்கள் முன்னெடுத்தார்.

மேலும் ஆணைக்குழுவின் வேலைப்பழுவுக்கு மத்தியிலும் வட மாகாண நிகழ்ச்சித் தொடரில் நேரடியாக கலந்து சிறப்பித்த கௌரவ ஆணையாளர் சனாதிபதி சட்டத்தரணி சேத்திய குணசேக்கர அவர்கள் ஊழலினை இல்லாதொழிப்பதில் உள்ளூராட்சி மன்றப் பிரதி நிதிகளின் பங்களிப்பு தொடர்பில் நடைமுறை உதாரணங்களுடன் கூடிய விடீயோ காட்சிப்படுத்தல்களுடன் சிறப்பாக முன்னெடுத்தார். உள்ளூராட்சி மன்ற சட்டக்கட்டமைப்பு தொடர்பில் முன்னாள் உள்ளூராட்சி மன்ற ஆணையாளரும் தற்போதைய வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளருமான திரு பற்றிக் டிரஞ்சன் அவர்களின் விரிவுரையும் மூன்று தினங்களிலும் முன்னெடுக்கப்பட்டது.

நேர்மையான தேசத்தின் உருவாக்கத்திற்கான வட மாகாண விஜயத்தில் 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச்சட்டம், நேர்மைத்திறன், முரண்பாட்டு ஆர்வ விதிகள், சொத்துக்கள் பொறுப்புக்கள் வெளிப்படுத்தல் தொடர்பான சாரம்சம் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் உதவிப்பணிப்பாளர் நாயகம் செல்வி தனுஜா பண்டார, உதவிப்பணிப்பாளர் சட்டம் எஸ். எம். சப்ரி ஆகியோரினால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டதுடன் மன்றங்களின் உறுப்பினர்களின் சந்தேக நிவர்த்தி தொடர்பிலான கலந்துரையாடலும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. நிகழ்ச்சித்திட்டம் தமிழ் மொழியில் நடைபெற்றதுடன் குறித்த ஆங்கில, சிங்கள மொழி மூல விரிவுரைகளிற்கான தமிழ் மொழி மூல உரை பெயர்ப்பும் வழங்கப்பட்டமை விஷேட அம்சமாகும். ஆணைக்குழுவின் ஊழல் தடுப்பு அதிகாரி திரு. சம்மி ஸ்ரீலால் மற்றும் அலுவலக உத்தியோகத்தர் மஸீர் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி, இந்தத் நிகழ்ச்சித் தொடரில் கடந்த 2025 ஆகஸ்ட் முதல் இது வரையான காலப்பகுதியில் 8 மாகாணங்களின் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றுள்ளதுடன் இறுதி நிகழ்வாக ஊவா மாகாண நிகழ்ச்சி பெப்வரியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

06 1

06 1

06 1

06 1

06 1

06 1

06 1

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search