எம்மைப் பற்றி

1994 ஆம் ஆண்டில் அரசியலமைப்பிற்கான 17 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் 1994 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழு உருவாக்கப்பட்டது. இச்சட்டமானது இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிப்பதற்கான நிரந்தர ஆணைக்குழுவினை தாபித்ததுடன், இலஞ்ச சட்டம் மற்றும் 1975 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் சொத்துக்களையும் பொறுப்புக்களையும் வெளிப்படுத்தும் சட்டத்தின் கீழான குற்றங்களுக்கு வழக்கிடுதல் நடவடிக்கையினை மேற்கொள்கின்றது. இன்று இலஞ்சம் மற்றும் ஊழலுக்கெதிரான சட்டரீதியான நிலையான சுயாதீன அமைப்பாக விளங்குகின்றது.

முதலாவது ஆணைக்குழுவின் செயற்பாடுகள் 1994 ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமானது. இவ் ஆணைக்குழுவில் மூன்று உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதுடன் அவர்களில் இருவர் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற அல்லது மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளாதல் வேண்டும் என்பதுடன் ஒரு உறுப்பினர் குற்றவியல் விசாரணை மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிறந்த அனுபவமிக்கவரதால் வேண்டும்.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் சுயாதீனத்தினை நிலைநாட்டும் வகையில் ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் நியமனமானது அரசியலமைப்புப் பேரவையின் பரிந்துரையின் பேரில்; சனாதிபதியினால் நியமிக்கப்படுவதுடன் பதவி நீக்கமானது அவர்களின் தவறான நடத்தை அல்லது தகைமையீனம் காரணமாக பாராளுமன்றத்தினால் மாத்திரமே மேற்கொள்ளப்படுதல் வேண்டும். ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் 5 வருடங்கள் பதவி வகிக்க முடியுமாவதுடன் மீண்டும் தெரிவு செய்யப்பட தகுதியற்றோராவர். ஆணைக்குழுவானது எந்தவொரு அமைச்சு, திணைக்களத்திற்குற்படாததாகும். ஆணையாளர்கள் மற்றும் பணிப்பாளர் நாயகம் சனாதிபதி செயலகத்துடன் இணைந்து செயற்படுவர். இவர்களின் சம்பளமானது நேரடியாக திரட்டு நிதியிலிருந்து வழங்கப்படுகின்றது.

ஆணைக்குழு சட்டமானது பணிப்பாளர் தலைமையதிபதியின் நியமனம் தொடர்பில் விளக்குகின்றது. பணிப்பாளர் தலைமையதிபதியானவர் ஆணைக்குழுவின் பிரதான நிதி மற்றும் நிரவாக அலுவலராக இருப்பதுடன் புலனாய்வு மற்றும் வழக்கிடுதல் நடவடிக்கைகளுக்கான அவசிய ஏற்பாடுகளை வழங்கும் கடப்பாடுடையவராவார்.

ஆணைக்குழுவானது சட்டப்பிரிவு, விசாரணைப்பிரிவு மற்றும் நிர்வாகப்பிரிவினை உள்ளடக்கியது. ஆணைக்குழுவானது பகிரங்க சேவை ஆணைக்குழுவின் (Pளுஊ) கண்காணிப்பின் கீழ் சட்ட அலுவலர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வுகளை நடாத்துகின்றது. சட்ட அலுவலர்களை பதவியில் அமர்த்தும் அதிகாரம் மற்றும் ஒழுக்காற்று அதிகாரம் பகிரங்க சேவை ஆணைக்குழுவிற்குரியதாகும்.

புலனாய்வாளர்கள் இலங்கை பொலிஸில் இருந்து நியமிக்கப்படுவதுடன் ஆணைக்குழுவின் அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர்களாக பணிபுரிகின்றனர். புலனாய்வும் வழக்கிடுதல் நடவடிக்கையும் ஆணைக்குழுவின் விஷேட அனுமதியுடன் மாத்திரமே மேற்கொள்ளப்படுதல் வேண்டும். எவ்வாறாயினும் ஆணைக்குழுவானது உண்மையான சுயாதீனத்தை நிலைநாட்டும் வகையில் புலனாய்வாளர்கள் ஆணைக்குழுவின் அலுவலர்களாக செயற்படுவது அத்தியவசியமாகும்.

மேலதிகமாக ஆணைக்குழுவானது விஷேட தேர்ச்சி பெற்ற அலுவலர்களை இணைக்கவுள்ளது. குறிப்பாக கணக்காளர்கள், நில அளவியலாளர்கள், தகவல் தொழில் நுட்ப நிபுணர்கள் ஆகியோரினை உள்ளடக்கிய புலனாய்வுப்பிரிவினை நிறுவுதல்.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 5 இன் பிரகாரம் ஆணைக்குழுவானது தனது பணிகளை நிறைவேற்றுவதில் பல்வேறு தத்துவங்களையுடையதாக விளங்கவதுடன் குறிப்பாக வங்கி நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை பெறுதல், கணக்குகளை முடக்குதல் மற்றும் கடவுச்சீட்டுக்களை கையகப்படுத்தல் முதலான பல்வேறு சிறப்புத் தத்தவங்களையுடையதாக விளங்குகின்றது. அத்துடன் ஆணைக்குழு சட்டத்தின் 19(1) பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் ஆணைக்குழு உறுப்பினர்கள், அலுவலர்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளின் நிமித்தம் நல்லெண்ணத்துடன் தம்மால் செய்யப்பட்ட, செய்யாது விடப்பட்ட எத்தகைய செயலுக்கு எதிராகவும் வழக்கு நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படுவதில் இருந்து விடுபாட்டுரிமை அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆணைக்குழுவானது இலஞ்சம்ஊழல் மற்றும் சொத்துக்கள் பொறுப்புக்கள் வெளிப்படுத்தல் சட்டம் விரிவுபடுத்தவுள்ளதுடன் அது அனைத்துவிதமான முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கும், வழக்கிடுவதற்கும் அதிகாரமளிக்கப்பட்டதாகும்.

நாங்கள்

புலனாய்தல்

வழக்கிடுதல்

தவிர்த்தலுக்காகச் செயற்படுதல்

கடந்த கால ஆணைக்குழு உறுப்பினர்கள் விபரம்

முதலாவது ஆணைக்குழு 1994 திசம்பர் மாதம் 15ஆம் திகதியன்று நியமிக்கப்பட்டது

முதல் ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் (15.12.1994 – 14.12.1999)

  • நீதியரசர் ரீ.ஏ. டீ எஸ். விஜேசுந்தர – ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர்
    நீதியரசர் சில்வா செல்லையா – ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதி மன்ற நீதியரசர்
  • உறுப்பினர் - இவர் - 1997.01.09 - காலமானார்.
  • திரு.சீ.விஜேசூரிய – ஓய்வுபெற்ற கணக்காய்வாளர் நாயகம் - உறுப்பினர் - இவர் - 1995.07.13 ஆம் திகதி - இராஜினாமா செய்தார்.
  • திரு.ருத்துரா இராஜசிங்கம் - ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர்
    உறுப்பினர் - 1995.07.14 அன்று நியமிக்கப்பட்டார்.

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search