இலஞ்சம் மற்றும் ஊழலில் ஈடுபடும் மக்களை அதிலிருந்து மீட்க வேண்டிய சந்தர்ப்பங்கள் மற்றும் துண்டுதல்களையே தடுப்பு நிவாரணம் வேண்டிநிற்கிறது. இது சமுதாயத்தில் நடத்தை மற்றும் மனப்பாங்கு ரீதியான மாற்றத்தை வேண்டிநிற்கிறது. அதன் அனுபவங்களை அடிப்படையாகக்கொண்ட ஆணைக்குழு பூச்சிய சகிப்புத்தன்மைக் கொள்கையை படிமுறைகளை நடைமுறைப்படுத்த அதன் முக்கிய குறிக்கோள்களை தடுக்கும் முயற்சியில் ஈடுபடுவதை அங்கீகரிக்கிறது. சிவில் சமுதாயம் மற்றும் சமூக அடிப்படையிலான அமைப்புக்களுடனான ஆணைக்குழுவின் கூட்டாண்மை வளர்ச்சி மற்றும் வலுப்படுத்தல் என்பன முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் பரந்தளவில் தடுக்கும் ஒரு முக்கிய பகுதியாக இருக்கும்.

ஆணைக்குழுவின் செயற்றிறன் குறிப்பாக தடுப்பு நிவாரணத்தில் பரந்த சட்டக் கட்டமைப்பை சார்ந்துள்ளது. 'தேசிய நேர்மைத்திறன் முறைமை' என்பது நிறுவனங்களின் சட்ட ஒழுங்குமுறைகள் மற்றும் சுற்றறிக்கைகளை உள்ளடக்கியது. அவை ஆணைக்குழுவின் கட்டளையை நேரடியாகவும் மறைமுகமாகவும் முன்னெடுக்கிறது.

அது ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து இலஞ்ச மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழு பல சர்வதேச அமைப்புக்களுடன் இணைந்து பணியாற்றும் வகையில் கட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலம் ஊழலுக்கெதிரான நடவடிக்கைகளை மேலும் சிறப்பாக செயல்படுத்த உதவியது. 2015 ஆம் ஆண்டு முதல் இலஞ்ச மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழு தனது நடவடிக்கைகளில் சிவில் சமூக அமைப்புக்களை ஈடுபடுத்த பல வலுவான நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இதன் முதற்கட்டமாக 2015 டிசம்பர் 9 ஆம் திகதி அன்று சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தன்று சிவில் சமூக அமைப்புக்கள் (CSOs) பொது மக்கள், அரசியல் வாதிகள் மற்றும் சர்வதேச சமூக பிரதிநிதிகளின் பங்கேற்ப்புடன் 'நடைபவணி' செயற்றிட்டத்தை முதற்தடவையாக ஆணைக்குழு ஏற்படுத்தியது. இலஞ்ச மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழு பல சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் (INGOs)இ தேசிய அரச சார்பற்ற நிறுவனங்கள் (NGOs) உள்ளுர் சமுதாய அடிப்படையிலான நிறுவனங்கள் (CBOs) என்பவற்றோடு இணைந்து பல சிவில் சமூகம்சார் நடவடிக்கைகளையும் ஆலோசனைகளையும் வழங்கி உதவியது. ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB), ஐ.நா.அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் (UNDP), ட்ரான்பெரன்ஸி இன்டர் நெஷனல்(TISL), சர்வோதயம், மாற்றுக் கொள்கைகளுக்கான மையம், (CPA), சட்ட மற்றும் சமூக அறக்கட்டளை (LST), ஊழல் எதிர்ப்பு முண்ணனி, இப்போதைய ஜனநாயக உரிமைகள் மற்றும் பல தொழிற் சங்கக்கூட்டுக்கள் என்பன அவற்றுள் சிலவாகும். இதில் சிவில் சமுதாய கூட்டமைப்பும் அழைக்கப்பட்டன. இலஞ்ச மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் புதிய மூலோபாய திட்டத்தை உருவாக்குவதில் அவர்கள் தீவிரமாக பங்குபற்றினர். 'பூச்சிய சகிப்புடனான ஏழு படிமுறைகள்' எனும் தலைப்பில் இது செயற்பட்டது. (2015 டிசம்பர்)

இலஞ்ச மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழு மற்றும் சிவில் சமூக அமைப்புக்களிடையே உருவாக்கப்பட்ட தொடர்பு CIABOC ன் தடுப்பு தொடர்பான வேலைகளில் இலஞ்ச மற்றும் ஊழல் சார்த்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவுடன் இணைந்து பணியாற்றுவதற்கான நம்பிக்கையை பெரிதும் மேம்படுத்தியது. CSOs ன் கூட்டு ஒப்பந்தங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பிரகடனச்சட்டம் என்பவற்றை திருத்துவதற்கான வழிகளில் CSOs கூட்டுடன் நேர்மறையான மற்றும் ஒத்துழைப்பான சூழலை உருவாக்கியது. TISL, LST என்பவற்றின் பங்குபற்றலானது (இலஞ்ச மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவுக்கு உதவுவதற்கான பாராளுமன்றத்தால்விடுக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பிரகடனச்சட்டம் சரியான நேரத்தில் மற்றும் பொருத்தமான இறுதி தயாரிப்புடன் வெளிவர உதவியது.

CIABOC தற்போது ஆங்கிலத்திலும் இரு உள்ளுர் மொழிகளிலும் அதாவது சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளிலும் இணையத்தள வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. இலஞ்ச மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் நேரடி

பத்திரிகை மாநாடுகள், ஊடக அறிக்கைகளானவை அதன் பொது முகத்தை மேம்படுத்தியதுடன் பொறுப்புணர்வின் வெளிப்பாடாக அமைந்துள்ளது. சில சந்தர்ப்பங்களில் விசாரனைகளின் சிறப்பான முன்னேற்றத்தை உறுதி செய்தது. இது சம்பந்தமாக இலஞ்ச மற்றும் ஊழல் சார்த்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழு பல மட்டங்களில் தனது பரந்த ஊடுறுவல் மற்றும் கருத்தாடலுக்கு களம் அமைத்து சமூக அங்கீகாரத்தை பெறுகிறது.

இலஞ்ச மற்றும் ஊழல் சார்த்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழு தற்போது மிகவும் துரிதமானதும் அறிவூட்டுவதுமாக துரித தொலைபேசி சேவை (HOTLINE)1954 மற்றும் மின்னஞ்சல் ஆகியவற்றை ciaboc@eureka.lk ஆகியவற்றை முறையாக பராமரித்து நவீன முறையில் முறைப்பாடுகளை மேற்கொள்ளும் வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.

இலஞ்ச மற்றும் ஊழல் சார்த்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழு பல்வேறு மட்டங்களில் வழக்கமான பொது விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்துகிறது. தற்போது (இலஞ்ச மற்றும் ஊழல் சார்த்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழு ஒரு தடுப்பு நிவாரணப் பிரிவை உருவாக்க அமைச்சரவை பத்திரத்தை சமர்பித்துள்ளது.

இலஞ்ச மற்றும் ஊழல் சார்த்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழு ஏற்கனவே நடவடிக்கைகளை எடுத்ததுடன் தேசிய கல்வி நிறுவனத்துடன் (NIE) இணைந்து பாடசாலை பாடத்திட்டத்துக்குள் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான கல்வி தொடர்பான அம்சங்களை உட்செலுத்துவதற்கான கலந்துலையாடல்களை மேற்கொண்டது. இலஞ்ச மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழு மற்றும் கல்வி அமைச்சும் இணைந்து எதிர்கால தலைமுறைக்கு நேர்மைதிறனைப் போதிப்பதற்கு பல நீண்ட கால மற்றும் குறுகிய கால திட்டங்களை ஆரம்பித்துள்ளன. அந்த வகையி;ல் ஊழல் எதிர்ப்பு மாதமாக அக்டோபர் மாதத்தை அறிவித்தல்,7 பிரிவுகளில் ஆக்கத்திறன் போட்டிகளை மேற்கொள்ளல்இ பள்ளி நிர்வாகத்தில் ஊழலை கட்டுப்படுத்துவதற்கான ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்தல், பாடசாலைகளில் நேர்மைத்திறனுடன் தொடர்புடைய கலைத்திட்டத்தினை அறிமுகப்படுத்தல், அனைத்து பாடசாலைகளிலும் நேர்மைக் குழுக்களை உருவாக்கல் போன்ற பல்வேறு செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

அரசியலமைப்பில் பிரதிபலிக்கும் ஊழல் எதிர்ப்புக் கொள்கைகள்

  1. இறைமை
    இலங்கையின் அரசியலமைப்புச்சட்டம் அடிப்படை சட்டக் கோட்பாடுகளை உள்ளடக்குகிறது. அதன் படி இலங்கை மக்களின் இறையான்மையானது ஒரு ஜனநாயக அமைப்பு முறையின் கீழ் சட்டமன்றம் மற்றும் நீதித்துறையின் மூலம் நிறைவேற்றப்படுகிறது.

    பொது அக்கறை வழக்காடல் கோட்பாடு- மக்கள் இறையான்மைக்கான களஞ்சியமாக இருப்பதால் மக்களுக்கு நன்மைபயக்கும் வகையில் நம்பிக்கையுடன் அரசாங்கத்தால் ஒப்படைக்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும். மக்களுக்கு எவ்வகையான ஊழலிலிருந்தும் சுதந்திரமாக இருப்பதற்கான பூரண உரிமையுண்டு. அரசாங்க நடைமுறைகள் இந்த அடிப்படை விதிகளினடிப்படையிலேயே அமைந்துள்ளது.

     

  2. அடிப்படை உரிமைகள்
    அரசியலமைப்பின் மூன்றாம் அத்தியாயத்தின் கீழ் அடிப்படை உரிமைகள் அரச அதிகாரத்தை நடைமுறைப்படுத்துவதில் அரச கொள்கையை வழிநடத்துகின்றன. அடிப்படை உரிமைகள்இ இறையாண்மைக்கு ஒரு அம்சம் ஒப்படைக்கப்படாது மற்றும் அரசாங்கத்தின் எந்த உறுப்புடனும் கையளிக்கப்படாதுஇ எனவே அரசாங்க அதிகாரங்களுக்கு மேல் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்

     

  3. சட்டவாட்சி
    அனைத்து நபர்களும் சட்டத்துக்கு முன் சமமானவர்கள் மற்றும் சட்டத்தின் முன் சமமான பாதுகாப்பிற்குறியவர்கள். (பிரிவு 12 (1) )
    இந்த ஆக்கத்தில் குறிப்பிடப்பட்ட அரச பொது அமைப்புக்கள் மற்றும் அதிகாரிகளின் விருப்பு அதிகாரங்களை கட்டுப்படுத்தும் அங்கீகாரம் பெற்ற விதிகள் என்பன கொள்கை கட்டமைப்பின் கீழ் செயற்பட வேண்டும். அனைத்து சட்டங்களும் சட்டவிதியின் அடிப்படையில் அமைந்தன.

     

  4. அரச கொள்கையின் அடிப்படை கொள்கைகள் மற்றும் அடிப்படை கடமைகள் (அத்தியாயம் 6)
    இந்த அத்தியாயத்தில் அனைத்து நபர்களும் ஊழலிலிருந்து விலகி பொது உடைமைகளை பாதுகாப்பதற்காக அவர் அறிந்திருக்கும் ஊழலை வெளிப்படுத்துவது அவசியம். இந்த உரிமைகள் அல்லது கடமைகள் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தாலும் ஒவ்வொரு பொது அலுவலரும் உத்தரவாதமாக சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளும் உறுதிமொழி கோட்பாடும் உண்டு. கடமைகளை நிறைவேற்றும் பொருட்டு ஊழலற்ற நிலைமையை நிலைநாட்ட உரிய ஸ்தானத்தில் வைத்து சரியான வழிகாட்டல்களை அரசு வழங்கி வருகிறது.

     

  5. பகிரங்க சேவை
    அரசியலமைப்பு அத்தியாயம் 9 இன் படி முறையான நிர்வாகம்இ ஒழுங்குமுறை, வெளிப்படைத்தன்மை போன்றவற்றில் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்துவதற்கான அடிப்படை தரங்களை கொண்ட அடிப்படை கட்டமைப்பு

     

  6. பொது நிதி மற்றும் நிதி வெளிப்படைத்தன்மை மேலாண்மை
    அரச நிதிக்கொள்கை மற்றும் கணக்காய்வு செயன்முறை அரசியலமைப்பு 17 இன் கீழ் அதன் வெளிப்படைத்தன்மை, தொடர் கண்காணிப்பு, பொறுப்புணர்வு ஆகியவற்றுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

     

  7. அரசியலமைப்பு 7 மற்றும் 14 ன் கீழ் பொது மக்களுக்கு அவர்களின் பிரதிநிதிகளை தெரிவு செய்ய இலவச மற்றும் நியாயமான தேர்தல்களை நடாத்துவதற்கான தேர்தல் கொள்கைகள்

  8. அரசியலமைப்பின் 19வது திருத்தம் சட்டவிதிகள் பொது விவகாரங்களின் முறையான மேலாண்மை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றுக்கான அதிக அங்கீகாரத்தை வழங்குகிறது.

     

  9. அரசியலமைப்பின் 19வது திருத்தம் சமுதாய பங்களிப்பை அங்கீகரிக்கிறது.

     

  10. UNCAC மற்றும் பிற தொடர்புடைய சர்வதேச மரபுகள் ஊழல் தடுப்பு மீது தாங்கி நிற்கின்றன. இலங்கையானது அரசியலமைப்பின் 156 (1) (ஊ) ன் கீழ் மேற்ப்படி சமவாயத்திற்கு அரசியலமைப்பு அங்கீகாரத்தை வழங்கியது.

     

  11. அரசியலமைப்பு பேரவையின் உருவாக்கம் 3உறுப்பினர்களி;ன் பங்குபற்றலுடன் அரசியலமைப்பின் கீழ் சுயாதீன ஆணைக்குழுக்களை வலுப்படுத்தல், தகவல் அறியும் சட்டத்துக்கான சட்டத்தை இயற்றுவது என்பன UNCAC விதி 5 (1) ன் கீழ் ஏற்படுத்தப்பட்ட குறிப்பிடத்தக்க பங்களிப்பாகும்.

     

  12. தனியார் துறைகளில் ஊழலை தடுக்க பல சட்ட ஏற்பாடுகளும், வழிகாட்டுதல்களும் உள்ளன. (உ-ம்: 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பனி சட்டம்)

     

  13. 2015 ஒக்டோபர் முதல் திறந்த அரச கூட்டு ஒப்பந்தத்திற்கு (Open Government Partnership) அமைய ஊழல் தடுப்பு திட்டமொன்றை தயாரிப்பதாக இலங்கை ஒப்புதல் அளித்தது.

     

  14. குறிப்பிட்ட சில சட்டங்கள் பணமோசடிகளை தடுக்கின்றன. (2006 ஆம் ஆண்டின் 5ம் இலக்க பணச்சலவை தடுப்பு சட்டம்)

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search